மரம் சாய்ந்து மின் வினியோகம் பாதிப்பு


மரம் சாய்ந்து மின் வினியோகம் பாதிப்பு
x

நெல்லையில் மரம் சாய்ந்து மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை வண்ணார்பேட்டை பிரிவுக்கு உட்பட்ட ரெயில்வே பீடர் சாலையில் நேற்று திடீரென்று மரம் சாய்ந்தது. இந்த மரம் அங்கிருந்த மின் கம்பிகள் மீது விழுந்ததால் மின்கம்பிகள் சேதம் அடைந்து மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். பின்னர் மின் கம்பிகளை சீரமைத்து மீண்டும் மின் வினியோகம் வழங்கினர்.


Next Story