மின் வினியோக பிரச்சினைகளை சரிசெய்ய குழு
மழையால் ஏற்படும் மின் வினியோக பிரச்சினைகளை சரிசெய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ெதரிவித்துள்ளார்.
மழையால் ஏற்படும் மின் வினியோக பிரச்சினைகளை சரிசெய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ெதரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராமநாதபுரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ராஜேசுவரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மின்சார பிரச்சினை
ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மழைக் காலங்களில் ஏற்படும் மின்தடை மற்றும் இடர்பாடுகளை எதிர்கொள்ள போதிய முன்ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மின்சார பிரச்சினைகளை சரிசெய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவிற்கு 10 பேர் வீதம் 7 குழுக்கள் உதவி செயற்பொறியாளர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி மக்கள் இந்த குழுவை பகுதி வாரியாக தொடர்புகொண்டு தங்களது மின்சார பிரச்சினைகளை சரிசெய்து கொள்ளலாம்.
இக்குழுவிற்கு சிறப்பு அலுவல் அதிகாரியாக செயற்பொறியாளர் ஸ்ரீராம் (9443163242) மற்றும் ஒவ்வொரு துணை கோட்ட அளவிலும் பொறியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பகுதிவாரியாக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் பெயர், புகார் தெரிவிக்க வேண்டிய மொபைல் எண் கொடுக்கப்பட்டுள்ளது.
செல்போன் எண்கள்
அதன்படி ராமநாதபுரம் கோட்டதிற்கு உட்பட்ட அனைத்து பகுதிகள் இளங்கோ (9445853033), ராமநாதபுரம் நகர், கீழக்கரை, தேவிபட்டினம், ரெகுநாதபுரம் பிரிவை சேர்ந்த பகுதிகள் பாலமுருகன் (9445852662), ராமநாதபுரம் ஊரக பிரிவுக்கு உட்பட்ட கிராமப்பகுதிகள், உச்சிப்புளி, பனைக்குளம், மண்டபம், ராமேசுவரம், திரு உத்திரகோசமங்கை, பிரிவை சேர்ந்த பகுதிகள் செந்தில்குமார் (9445853324), திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர், தொண்டி, ஆனந்தூர், நகரிகாத்தான் பிரிவை சேர்ந்த பகுதிகள் நிசாக் ராஜா (9445852661), பரமக்குடி கோட்டதிற்கு உட்பட்ட அனைத்து பகுதிகள் ரெஜினா ராஜகுமாரி (9445853030), பரமக்குடி நகர் துணை கோட்டதிற்கு உட்பட்ட அனைத்து பகுதிகள் கங்காதரன் (9445852663), பரமக்குடி கிராமப் பகுதி, சத்திரக்குடி, பார்த்திபனூர், நயினோர்கோவில், பிரிவை சேர்ந்த பகுதிகள் புண்ணிய ராகவன் (9445853014).
கமுதி நகர், கமுதி கிராமப்புற பகுதி, அபிராமம், பெருநாழி, பிரிவை சேர்ந்த பகுதிகள் விஜயன் (9445853015), முதுகுளத்தூர், கடலாடி, வாலிநோக்கம், சிக்கல், சாயல்குடி பகுதிகள் மாலதி (9445853016) ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். பருவ மழையின் போது ஏற்படும் மின்பிரச்சினைகள் குறித்து பொது மக்கள் தங்கள் பகுதிக்கான நியமிக்கப்பட்ட அலுவலரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.