மின்சாரம் நிறுத்தம்


மின்சாரம் நிறுத்தம்
x

பாரனூர்,பேரையூர், வங்காருபுரம் பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சவேரியார் பட்டினம் துணை மின் நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) மாதந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் பாரனூர், இந்திரா நகர், கலங்காபுலி, கொத்திடல்-கலக்குடி, அத்தனூர், அழிந்திக்கோட்டை ஆகிய ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை திருவாடனை மின்வாரிய துறை உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) நிசாக்ராஜா தெரிவித்துள்ளார். இதேபோல கமுதி அருகே பேரையூர் மின் பாதையில் மின் பராமரிப்பு காரணமாக இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பேரையூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான உலகநடை, ஜெகநாதபுரம், பாக்கு வெட்டி, கருங்குளம், மருதங்கநல்லூர், பேரையூர், சாமிபட்டி, மேட்டுபட்டி, செங்கோட்டைபட்டி, புல்வாய் குளம், இலந்தைகுளம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. வங்காருபுரம் மின் பாதையில் மின் பராமரிப்பு பணி காரணமாக, வங்காருபுரம், அச்சங்குளம், மேலக்கொடுமலூர், கீழக்கொடுமலூர், டி.புனவாசல், செய்யாமங்கலம், தரைக்குடி, வல்லக்குளம் ஆகிய பகுதிகளிலும் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை உதவி செயற் பொறியாளர் விஜயன் தெரிவித்துள்ளார்.


Next Story