மின்சாரம் நிறுத்தம்
காரைக்குடி பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
காரைக்குடி,
அமராவதிபுதூர் துணை மின் நிலையத்தில் இன்று (ெசவ் வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை அமராவதிபுதூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தேவகோட்டை ரோடு, சங்கராபுரம், ஆறாவயல், தானாவயல், வேட்டைக்காரன்பட்டி, அரியக்குடி, விசளயங்கோட்டை, எஸ்.ஆர். பட்டணம், கல்லுப்பட்டி, சாத்தம்பத்தி, ஊகம்பத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவு பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின் வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்து உள்ளார்.
கல்லல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் உயர் அழுத்த மின் பாதை பராமரிப்பு பணிகளுக்காக நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை கல்லல், ஆலம்பட்டு, குருந்தம்பட்டு, அரண்மனை சிறுவயல், வெற்றியூர் சாத்தரசம்பட்டி, பாகனேரி, நடராஜபுரம், பனங்குடி, கண்டிப்பட்டி, கவுரிப் பட்டி, செம்பனூர், செவரக்கோட்டை, வெங்கட்ராமபுரம், கீழக்கோட்டை தேவபட்டு, சொக்கநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப் படும். இதனை மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.