மின்சாரம் நிறுத்தம்
சிவகங்கை மற்றும் மதகுபட்டி பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிவகங்கை மற்றும் மதகுபட்டி பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மதகுபட்டி
மதகுபட்டி துணை மின் நிலையத்தில் பட்டமங்கலம் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறு வதால் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மதகுபட்டி, ஒக்கூர், கீழமங்கலம், காடனேரி, அம்மன் பட்டி, நகரம் பட்டி, காளையார் மங்கலம், கருங்காப்பட்டி, கருங்காலக்குடி, அண்ணா நகர், பர்மா காலனி, நாலுகோட்டை, மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சிவகங்கை
சிவகங்கை நகர் பகுதி மின் பகிர்மானத்தில் உள்ள பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்திரா நகர் கிழக்கு, இந்திரா நகர் மேற்கு, சௌகத் அலி தெரு, நேரு பஜார், மானாமதுரை ரோடு, இளையான்குடி ரோடு, பழைய மருத்துவமனை, மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.இந்த தகவலை சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.