விருதுநகரில் வளைகோல் பந்து பயிற்சி
விருதுநகரில் வளைகோல் பந்து பயிற்சி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாடு இந்தியா திட்ட நிதி உதவியில் தொடக்க நிலை வளைகோல் பந்து பயிற்சிக்கான விளையாடு இந்தியா மாவட்ட மையம், மாவட்ட விளையாட்டு அரங்கம் விருதுநகரில் செயல்பட உள்ளது. மையத்தில் 30 முதல் 100 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தினசரி பயிற்சி காலை மற்றும் மாலை வேளைகளில் பயிற்றுனர் மூலம் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இதில் சேருவதற்கான மாவட்ட தேர்வு போட்டிகள் நாளை(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. தேர்வு போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு பயணப்படி வழங்கப்பட மாட்டாது. அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் திட்டத்தின் கீழ் சேர்ந்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.