நேரு மைதானத்தில் மாலை 6 மணிக்கு மேல் பயிற்சி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்


நேரு மைதானத்தில் மாலை 6 மணிக்கு மேல் பயிற்சி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
x

சென்னையில் மே தின விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான, தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

சென்னை,

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை , சென்னை மாவட்ட பிரிவின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவை இணைந்து 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்களை நடத்துகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் முதல் முறையாக பொதுப்பிரிவு ,பள்ளி ,கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளுக்கும், மற்ற பிரிவுகளில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

மாவட்ட அளவிலான போட்டிகள் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் நடைபெறுகிறது. மாநில அளவிலான போட்டி மே மாதத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளுக்கு மொத்தமாக 25 கோடி ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளது.

இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவில் நடைபெற்று வரும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மே தின பூங்கா மைதானத்தில் இன்று தொடங்கிய இந்த போட்டியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான கால்பந்து போட்டி, பொதுபிரிவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கபடி மற்றும் இறகு பந்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து சென்னை தியாகராய நகர் கண்ணதாசன் மைதானத்தில், பள்ளி மாணவ மாணவிகளுக்கான கூடை பந்து போட்டி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான சிலம்பம் போட்டி, அரசு ஊழியர்களுக்கான சதுரங்க போட்டி உள்ளிட்டவற்றை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.

இந்தநிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

சென்னை நேரு விளையாட்டரங்கில் மாலை 6 மணிக்கு மேல் வீரர்கள் பயிற்சி செய்ய விரைவில் அனுமதி வழங்கப்படும். மாலை 6 மணிக்கு மேல் விளையாட்டு வீரர்கள் பாதுகாப்புடன் பயிற்சி மேற்கொள்ள அனுமதி தரப்படும் என்றார்.


Related Tags :
Next Story