சட்டப்படிப்புக்கான கிளாட் தேர்வுக்கு பயிற்சி


சட்டப்படிப்புக்கான கிளாட் தேர்வுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 6 Oct 2023 12:15 AM IST (Updated: 6 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தாட்கோ சார்பில் சட்டப்படிப்புக்கான கிளாட் தேர்வுக்கு பயிற்சி நடந்தது.

ராமநாதபுரம்

தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சட்ட பல்கலைக்கழகங்களில் சட்டப்படிப்பு படிப்பதற்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் கிளாட் பொது நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்படவுள்ளது. 18 முதல் 25 வயது நிரம்பிய 12-ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் மற்றும் தற்போது 12-ம் வகுப்பு படித்து வருபவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மேலும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை இணையதளம் வழியாகவும், தேர்வு நடைபெறும் முறை நேரிடையாகவும் நடைபெறும். இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் சட்டப்படிப்பு படிப்பதற்கு மற்ற நுழைவுத் தேர்வுகளுக்கும் பயிற்சி வழங்கப்படும். பொது நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட தேர்வுகளான, நேர்காணல், குழு விவாதம், எழுத்துத் தேர்வு ஆகியவற்றிற்கும் பயிற்சி வழங்கப்படும். மேற்கண்ட தேர்விற்கு ஆதிதிராவிடர் பழங்குடியினர் பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோவால் வழங்கப்படும். இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story