காலை உணவு திட்டம் குறித்து பயிற்சி


காலை உணவு திட்டம் குறித்து பயிற்சி
x
தினத்தந்தி 19 May 2023 12:15 AM IST (Updated: 19 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி ஒன்றியத்தில் காலை உணவு திட்டம் குறித்து பயிற்சி நடந்தது.

விழுப்புரம்

செஞ்சி:

செஞ்சி ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும், பொறுப்பாளர்களுக்கு சமையல் செய்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் திட்ட வட்டார அலுவலர் ரஞ்சிதா வரவேற்றார். செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், செஞ்சி ஒன்றியத்தில் 78 பள்ளிகளில் 4,880 மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை உணவு வழங்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றார். இதில் எந்தெந்த நாட்களில் என்னென்ன உணவு தயார் செய்வது, எப்படி தயார் செய்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் அலுவலக மேலாளர் மணிமாறன், சத்துணவு மேலாளர் பழனி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story