திருமங்கலம் ஓமியோபதி மருத்துவக்கல்லூரியில் பயிற்சி டாக்டர்கள் போராட்டம்
திருமங்கலம் ஓமியோபதி மருத்துவக்கல்லூரியில் பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரியில் படித்த 52 மாணவர்கள் 4½ ஆண்டு காலம் மருத்துவ படிப்பை முடித்து ஓராண்டு காலம் பயிற்சி டாக்டராக பணிபுரிய வேண்டும். இந்நிலையில் பயிற்சி டாக்டராக பணியில் இருக்கும் தங்களுக்கு மாத ஊக்கத்தொகை 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். ஆனால் திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்களுக்கு கடந்த 6 மாதமாக ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு ஓமியோபதி பயிற்சி கல்லூரி டாக்டர்கள் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை வளாகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து பயிற்சி டாக்டர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து கோஷங்கள் எழுப்பினர்.