சதுரகிரியில் பிரதோஷ விழா


சதுரகிரியில் பிரதோஷ விழா
x

சதுரகிரியில் பிரதோஷ விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் வனத்துறை கேட் முன்பு குவிந்தனர். வனத்துறை கேட் காலை 6.30 மணிக்கு திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நடந்து சென்றனர். ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தரமகாலிங்க சுவாமிக்கு பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story