ஆரணி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ விழா


ஆரணி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ விழா
x

ஆரணி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ விழா நடந்தது

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ விழா நடந்தது

ஆரணி புதுக்காமூர் பகுதியில் உள்ள பெரிய நாயகி சமேத புத்திரகாமேட்டீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நேற்று சிவன், பார்வதி, நந்தியம்பெருமானுக்கு 27 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் ரிஷப வாகனத்தில் மலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு கோவில் உள் வளாகத்தில் வலம் வந்தது. அப்போது பக்தர்கள் சிவபுராணம் பாடியபடி வலம் வந்தனர்.

இதே போல கோட்டை கைலாயநாதர் கோவில், பூமிநாதர் கோவில், காமக்கூர் சந்திரசேகர சாமி கோவில், சேவூர்- பையூர் விருப்பாச்சிஸ்வரர் கோவில், எஸ்.வி.நகரம் திரைகேமேஸ்வரர் கோவில், மெய்யூர் மெய்கண்டீஸ்வரர் கோவில், பழங்காமூர் காசி விஸ்வநாதர் கோவில், வந்தவாசி கைலாச நாதர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷ விழா நடந்தது.


Next Story