பிரதோஷ வழிபாடு


பிரதோஷ வழிபாடு
x

பிரதோஷ வழிபாடு நடந்தது.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில் உள்ள பயறணீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்திபெருமானுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் நந்திபெருமானுக்கு வஸ்திரம் சாத்தப்பட்டு, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் உடையார்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story