பிரதோஷ வழிபாடு
எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் உள்ள பழமையான கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோவிலில் மார்கழி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
சிவகங்கை
எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் உள்ள பழமையான கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோவிலில் மார்கழி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தீஸ்வரர் மற்றும் கைலாசநாதருக்கு 11 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதேபோல் உலகம்பட்டியில் உள்ள உலகநாயகி சமேத உலகநாத சாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. அதனை தொடர்ந்து உலகநாயகி சமேத உலகநாத சாமிகள் ரிஷப வாகனத்தில் உள்மண்டப பிரகாரத்தில் எழுந்தருளினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story