சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு
சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
விருதுநகர்
வத்திராயிருப்பு,
மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று நடைபெற்ற பங்குனி மாத பிரதோஷ வழிபாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நேற்று காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்க்காக சென்றனர். பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.
Related Tags :
Next Story