மகாதேவர் கோவிலில் பிரதோஷ வழிபாடு


மகாதேவர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
x

திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

கன்னியாகுமரி

களியக்காவிளை,

புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்திக்கு பால், இளநீர், பன்னீர் உட்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர் அலங்கார செய்யபட்டு பூஜைகள், தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். இதுபோல், முன்சிறை மகாதேவர் கோவில் குழித்துறை திப்பிலங்காடு மகா தேவர் கோவில், குழித்துறை மகாதேவர் கோவில் போன்ற சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.


Next Story