சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
தியாகதுருகம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு திரளான பக்தா்கள் தரிசனம்
கள்ளக்குறிச்சி
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே உள்ள நஞ்சுண்ட தேசிக ஈஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இது தவிர தியாகதுருகம் அருகே சிறுநாகலூர் யோகநாயகி உடனுறை ஆத்மநாதசுவாமி, வடதொரசலூர் பெரியநாயகி உடனுறை பழமலை நாதர், எறஞ்சி காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதர், வடபூண்டி கனகாம்பிகை சமேத கைலாசநாதர், திம்மலை சிவக்கொழுந்தீஸ்வரர், குடியநல்லூர் கைலாசநாதர், முடியனூர் அண்ணாமலை ஈஸ்வரர், கனங்கூர் பர்வதவர்த்தினி சமேத ராமநாத ஈஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
Related Tags :
Next Story