சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
கரூர்
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி கோவிலில் உள்ள நந்திக்கு பால், பன்னீர், தயிர், மஞ்சள், இளநீர் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நந்திக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல் தோகைமலை ஒன்றியம் ஆர்.டி.மலை மீது அமைந்துள்ள விராச்சிலை ஈஸ்வரர் கோவிலில் நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story