ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு


ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 20 Jan 2023 12:30 AM IST (Updated: 20 Jan 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ருத்ரகோடீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான், ருத்ரகோடீஸ்வரராக கைலாச திருக்கோலத்தில் மேற்கு முகமாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பாகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு 108 லிட்டர் பால் மற்றும் தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story