விழுப்புரம் கோட்டாட்சியராக பிரவீனாகுமாரி பொறுப்பேற்பு


விழுப்புரம் கோட்டாட்சியராக பிரவீனாகுமாரி பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 18 Jun 2023 12:15 AM IST (Updated: 18 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் கோட்டாட்சியராக பிரவீனாகுமாரி பொறுப்பேற்றார்.

விழுப்புரம்

விழுப்புரம் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் திருப்பூர் மாவட்ட வழங்கல் அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மத்திய சென்னை கோட்டத்தில் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த ஏ.கே.பிரவீனாகுமாரி, விழுப்புரம் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டார்.

புதியதாக நியமிக்கப்பட்ட ஏ.கே.பிரவீனாகுமாரி, நேற்று விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு தாசில்தார்கள் வேல்முருகன், ஆதிசக்தி சிவக்குமரிமன்னன், ராஜ்குமார், செல்வம், கற்பகம் மற்றும் மண்டல துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story