இறால் வளர்ப்பு விவசாயிகள் சங்க கூட்டம்


இறால் வளர்ப்பு விவசாயிகள் சங்க கூட்டம்
x

நாகை மாவட்ட இறால் வளர்ப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் திருப்பூண்டியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்ட இறால் வளர்ப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் திருப்பூண்டியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாகை மாவட்ட இறால் வளர்ப்பு விவசாயிகள் சங்க தலைவர் சிதம்பரம் தலைமை தாங்கினார். செயலாளர் சிவசங்கரன், பொருளாளர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கடந்த 2017-ம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் கட்டண மாற்ற விகித உத்தரவில் விவசாயம் சார்ந்த பிரிவுகள் (இறால் வளர்ப்பு உள்பட) தொழிற்சாலைகளாக கருதக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தும், இறால் வளர்ப்பை தொழிற்சாலையாக சேர்க்கப்பட்டு மின்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இறால் வளர்ப்போரை தனி உட்பிரிவு செய்து நியாயமான மின் கட்டணத்தை நிர்ணயிக்க ஆணையத்திடம் முறையிட முடிவு செய்யப்பட்டது. இதில் இறால் வளர்ப்பு விவசாய சங்க பொறுப்பாளர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.



Next Story