வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
ஆத்தூர் ஒன்றியம், தொப்பம்பட்டி ஊராட்சியில் பொது சுகாதார துறையின் கலைஞர் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.
ஆத்தூர் ஒன்றியம், தொப்பம்பட்டி ஊராட்சியில் பொது சுகாதார துறையின் கலைஞர் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாம் தொடக்க விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.பி.கருப்பையா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் மகுடீஸ்வரன், ஆத்தூர் வட்டார வளர்ச்சி ஆணையர் லாரன்ஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சின்னாளப்பட்டி வட்டார மருத்துவ அதிகாரி ஆனந்தீஸ்வரி, மருத்துவ அலுவலர் சிவக்குமார், ஊராட்சி செயலாளர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து முகாமில் ரத்தப் பரிசோதனைகள், இ.சி.ஜி., கர்ப்பிணிகளுக்கு அல்ட்ரா ஸ்கேன் உள்ளிட்ட நவீன பரிசோதனைகள் நடைபெற்றது. பின்னர் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. முகாமில் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.