வருமுன் காப்போம் மருத்துவ முகாம்


வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 1 July 2023 12:15 AM IST (Updated: 1 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விளங்கம்பாடி கிராமத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.

விழுப்புரம்

மயிலம்:

மயிலம் அருகே விளங்கம்பாடி கிராமத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி முன்னிலை வகித்தார். மயிலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தேன்மொழி வரவேற்றார். மயிலம் ஒன்றியக்குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கி, மருத்துவ முகாமை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மயிலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பாரதிதாசன் தலைமையில் டாக்டர் செந்தில் மற்றும் மருத்துவ குழுவினர் சிறப்பு பொது மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, பல், வாய்புற்றுநோய் கண்டறிதல், மகப்பேறு, குழந்தைகள், தாய்சேய் நலம், எலும்பு மூட்டுவலி ஆகியவற்றிற்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் விளங்கம்பாடியை சுற்றியுள்ள கிராம மக்கள், நோயாளிகள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர். நிகழ்ச்சியில் மயிலம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சேதுநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன், ஒன்றியக்குழு துணை தலைவர் புனித ராமஜெயம், தி.மு.க. கட்சி நிர்வாகிகள் விஜயன், அன்சாரி, அருள், ஊராட்சி மன்ற மன்ற துணை தலைவர் உதயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story