பொன்னேரியில் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்


பொன்னேரியில் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
x

பொன்னேரியில் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை,

பொன்னேரியில் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி மற்றும் பொன்னேரி ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் தெ. பாஸ்கரன் பாண்டியன் தலைமை தாங்கினார். க.தேவராஜி எம்.எல்.ஏ.,, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினர். துணை சுகாதார இயக்குனர் -சுகாதாரப் பணிகள் டாக்டர் செந்தில் திட்ட விளக்க உரையாற்றினார்.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சி.என். அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், இல்லம் தேடி மருத்துவ பெட்டகம் போன்றவை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார், துணை தலைவர் ஸ்ரீதேவி காந்தி, மாவட்ட கவுன்சிலர் சிந்துஜா ஜெகன் ஆகியோர் மருத்துவ முகாம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர் ஏற்படுத்தினர்.

இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.சதிஷ்குமார், ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சி தேவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மகேந்திரன் (மண்டலவாடி) நந்தினி அருள் (பொன்னேரி) உள்ளிட்ட துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், மருத்துவ குழுவினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.========


Next Story