தீபாவளிக்கு முந்தைய நாள் பயணம் - அரசு விரைவு பஸ்களில் இன்று முன்பதிவு தொடக்கம்


தீபாவளிக்கு முந்தைய நாள் பயணம் - அரசு விரைவு பஸ்களில்  இன்று முன்பதிவு தொடக்கம்
x

www.tnstc.com என்ற இணைய தளம் வழியாக முன்பதிவு செய்யலாம்.

சென்னை,

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்காக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசித்து வரும் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளியை கொண்டாட பயணத்தை திட்டமிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் அரசு விரைவு பஸ்களில் தீபாவளி முன்பதிவு கடந்த 21ம் தேதி தொடங்கியது . 30 நாட்களுக்கு முன்னதாக அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு செய்யக் கூடிய வசதி உள்ளது. அதன்படி அக்டோபர் 22-ந்தேதி பயணம் செய்ய கடந்த 21ம் தேதி முன்பதிவு தொடங்கியது..

இந்த நிலையில் அரசு விரைவு பஸ்களில் தீபாவளிக்கு முன்தினம் பயணம் செய்ய இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. www.tnstc.com என்ற இணைய தளம் வழியாக முன்பதிவு செய்யலாம்.


Next Story