முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை


முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
x

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை,

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், பல்வேறு அரசுதுறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

அரசின் முன்னெடுப்பு திட்டங்களான 'முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்' என்ற பெயரில் ஏற்கனவே இது போன்ற கூட்டம் 5 முறை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் மீண்டும் 6-வது ஆய்வு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. தமிழக அரசின் திட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளன, அனைத்து மாவட்டங்களிலும் திட்டங்களின் நிலைப்பாடுகள் குறித்தும், விரைந்து முடிக்கப்படவேண்டிய திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கிலும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த கூட்டத்தில் அரசின் திட்டங்கள் சுனாமி வேகத்தில் முடிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி முதல்-அமைச்சர் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story