வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை


வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை  நடவடிக்கை: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
x

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில் ,சென்னை , திருவள்ளூர் ,காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.இதனால் பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல் அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் காணொலி காட்சி வாயிலாக இன்று காலை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.


Related Tags :
Next Story