கடந்த ஆண்டு கட்டாய பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை

கடந்த ஆண்டு கட்டாய பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை
x

அரசுபள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வின் போது கடந்த ஆண்டு கட்டாய பணி மாறுதலில் சென்றவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது

விருதுநகர்

அரசுபள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வின் போது கடந்த ஆண்டு கட்டாய பணி மாறுதலில் சென்றவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது

கலந்தாய்வு

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த 8-ந் தேதி முதல் இம்மாத இறுதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பதவி உயர்வு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டதால் பதவி உயர்வு கலந்தாய்வு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு இடமாறுதல் கலந்தாய்வுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. இந்தநிலையில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள உபரி பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு கட்டாய பணிமாறுதலில் சென்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை.

கட்டாய பணியிடமாற்றம்

கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்வு சமயத்தில் திடீரென உபரி ஆசிரியர்கள் மற்ற பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு கட்டாய பணியிடமாறுதல் செய்யப்பட்டனர்.

தற்போது நடைபெறும் கலந்தாய்வில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படாத நிலையில் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே பள்ளி கல்வித்துறை கடந்த ஆண்டு கட்டாய பணி மாறுதல் பெற்றவர்களுக்கு தற்போது நடைபெற உள்ள பொது மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அந்த ஆசிரியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story