தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை


தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை
x

தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட செம்பியகுடி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இவருடைய மனைவி நதியா (வயது 23). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் நதியா 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த கருவை கலைக்குமாறு பிரபு கூறியதால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில், மனமுடைந்த நதியா நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வெங்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நதியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story