தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை
கமுதி அருகே தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை செய்து ெகாண்டார்.
ராமநாதபுரம்
கமுதி,
கமுதி அருகே செங்கப்படை கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மனைவி மோகனபிரியா (வயது 22). இருவரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இருவீட்டார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது நேற்று முன்தினம் மோகனபிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலின் பேரில் கமுதி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். மோகனபிரியா எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். அதில் நோயால் அவதிப்பட்டு வருவதாகவும், அதனால் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டு இருந்தது. இது தொடர்பாக பரமக்குடி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story