சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது


சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது
x

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது.

திருச்சி

சமயபுரம்:

பூர்வாங்க பூஜைகள்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏழு நிலைகளை கொண்ட ராஜகோபுர கும்பாபிஷேகம் வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி யாகசாலை பூஜைக்காக ராஜகோபுரத்தின் முன்புறம் புதிதாக யாகசாலை அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது.

இதில் யஜமான சங்கல்பம், தேவதானுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், தனபூஜை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோவில் இணை ஆணையர் கல்யாணி, ராஜகோபுர உபயதாரர்களான இரட்டை சகோதரர்கள் பொன்னர் சங்கர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

யாகசாலை பூஜைகள்

இதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி, அக்னி சங்கரஹணம், தீர்த்த சங்கரஹகணமும், தீபாராதனையும் நடைபெறுகிறது. மாலை 6.05 மணிக்கு மேல் இரவு 8.30 மணிக்குள் முதல் கால யாக பூஜையும், நாளை (செவ்வாய்க்கிழமை) விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், இரண்டாம் கால யாக பூஜையும், மாலை 5.30 மணிக்கு மேல் இரவு 8 மணிக்குள் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெறுகிறது.

6-ந்தேதி (புதன்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம் மற்றும் நான்காம் கால யாக பூஜை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 6 மணிக்கு மகாபூர்ணாஹுதியும், தீபாராதனையும் நடைபெறுகிறது. அன்று காலை 6.45 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.


Next Story