திண்டுக்கல் 108 விநாயகர் கோவிலில் பக்தர்களுக்கு வழங்க 35 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு
திண்டுக்கல் 108 விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பக்தர்களுக்கு வழங்க 35 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் கோவில்களில் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி திண்டுக்கல் நன்மை தரும் 108 விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா நடைபெற இருக்கிறது. இதில் காலை 6 மணி முதல் விநாயகருக்கு பூஜைகள் நடத்தப்பட உள்ளன.
மேலும் கோவில் ஒரே கல்லால் அமைந்துள்ள 32 அடி உயரமுள்ள மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு அபிஷேகங்கள் நடைபெற உள்ளன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி கோவில் வளாகத்தில் 35 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி நேற்று தொடங்கியது. 40 பணியாளர்கள் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story