ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்


ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்
x

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்

திருவாரூர்

ஏப்ரல் 22-ந்தேதி குருபகவான் மீனராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசம் அடைவதை முன்னிட்டு ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

குருப்பெயர்ச்சி விழா

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு வருகிற ஏப்ரல் மாதம் 22-ந்தேதி பெயர்ச்சி அடைகிறார்.

அன்றைய தினம் இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெற உள்ளது.

விழாவை முன்னிட்டு குருபகவானுக்கு முதல் லட்சார்ச்சனை விழா ஏப்ரல் 16-ந்தேதி ெதாடங்கி ஏப்ரல் 20-ந்தேதி வரை நடக்கிறது. ஏப்ரல் 27-ந்தேதி முதல் மே 1-ந்தேதி வரை 2-ம் கட்ட லட்சார்ச்சனை நடைபெறும்.

குருபகவான் உருவம் பொறித்த டாலர்

லட்சார்ச்சனையில் பங்குபெறும் பக்தர்களுக்கு குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளியினால் செய்த டாலர் பிரசாதமாக வழங்கப்படும்.

காலை 9 மணிமுதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் குருபகவானுக்கு லட்சார்ச்சனை நடைபெறும்.

தோஷ பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் தங்களுடைய பெயர், நட்சத்திரம், ராசி ஆகிய முழு விவரங்களுடன் தொகையினை மணியார்டர், டிமாண்ட்

டிராப்ட் எடுத்து கோவில் முகவரிக்கு அனுப்பி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை பிரசாதத்தை அஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.

பிரசாதம் பெற்றுக்கொள்ளலாம்

அஞ்சல் மூலம் பிரசாதம் பெற விரும்புபவர்கள் லட்சார்ச்சனை பைபோஸ்ட் பதிவிலும் பதிவு செய்து லட்சார்ச்சனை பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை நாகப்பட்டினம் இணைஆணையர் ராமு உத்தரவின் பேரிலும் தக்கார்- உதவி ஆணையர், செயல்அலுவலர் மணவழகன் ஆலோசனை பேரிலும் கண்காணிப்பாளர், செயல் அலுவலர் அரவிந்தன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Related Tags :
Next Story