தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆயத்த கூட்டம்


தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆயத்த கூட்டம்
x

தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆயத்த கூட்டம் நடைபெற்றது.

கரூர்

தாந்தோன்றிமலையில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜேக்) சார்பில் ஆயத்த கூட்டம் நடைபெற்றது. இதற்கு டிட்டோஜேக் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளருமான பெரியசாமி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சி.பி.எஸ். திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும்.இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை கலைய வேண்டும். தொடக்க கல்வி துறையினை பள்ளி கல்வி துறையோடு இணைத்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அரசாணை 101, 108-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 4-ந்தேதி கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு 2,000 ஆசிரியர்கள் பங்கேற்கும் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மணிகண்டன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில துணை பொதுச்செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story