போலி ஆவணங்களை தயார் செய்து அதிகாரியைப் போல கையெழுத்திட்டு வீட்டு மனை விற்பனை 2 பேர் தலைமறைவு


போலி ஆவணங்களை தயார் செய்து அதிகாரியைப் போல கையெழுத்திட்டு வீட்டு மனை விற்பனை 2 பேர் தலைமறைவு
x

ஆரணி அருகே போலி ஆவணங்களை தயாரித்து அதிகாரியை போல் கையெழுத்திட்டு வீட்டுமனைகள் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அருகே போலி ஆவணங்களை தயாரித்து அதிகாரியை போல் கையெழுத்திட்டு வீட்டுமனைகள் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வீட்டுமனை

ஆரணி பகுதியைச் சேர்ந்த எ. அரசு மற்றும் தணிகைவேல் ஆகியோர் ஆரணியிலிருந்து ஆற்காடு நெடுஞ்சாலையில் வெள்ளேரி பகுதி உள்ளது. இங்கு கடந்த 2019-ம் ஆண்டு ஆர்.பி.ஜி. கார்டன் என்னும் வீட்டுமனை பிரிவு தொடங்கப்பட்டது.

அங்கு வீட்டுமனைகள் விற்பனை நடந்தது. அப்போது உள்ளாட்சி அமைப்பு நிர்வாகம் இல்லாத நிலையில் தனி அலுவலர்களாக இருந்த ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரின் பெயரில் கையொப்பமிட்டு வீட்டுமனைகள் விற்கப்பட்டுள்ளன.

அதனை வாங்கியவர்கள் வீடு கட்டுவதற்காக வங்கியில் கடனுதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். வங்கி நிர்வாகம் அந்த வீட்டுமனைகளை ஆய்வுக்கு ட்படுத்தியபோது சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் கையெழுத்து இடவில்லை என தெரியவந்தது.

இதனால் ஏமாற்றம் அடைந்தவர்கள் கலெக்டர், ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர், செய்யாறில் உள்ள ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகங்களில் புகார் அளித்து வந்தனர்.

அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டதில் போலி ஆவணங்கள் தயாரித்து அதிகாரிகளை போல் கையெழுத்திட்டு வீட்டுமனைகளை அரசு மற்றும் தணிகைவேல் ஆகியோர் விற்று முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வழக்குப்பதிவு

இது குறித்து ஆரணி தாலுகா போலீசில் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் புகார் அளித்தார். அதன்பேரில் அரசு மற்றும் தணிகைவேல் ஆகிய இருவர் மீது ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ் வழக்குப்பதிவு செய்தார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story