நெல்லையப்பர் கோவிலில் சந்தனாதி தைலம் தயார் செய்யும் பணி
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் சந்தனாதி தைலம் தயார் செய்யும் பணி நடந்தது.
திருநெல்வேலி
நெல்லை:
நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கடந்த 7-7-2021 அன்று ஆய்வு செய்தபோது, நெல்லையப்பர் கோவிலில் சந்தனாதி தைலம் தயார் செய்து சுவாமி அபிஷேகத்துக்கு பயன்படுத்தப்படும் என அறிவித்தார். அதன்படி தற்போது சுமார் 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட செம்பிலான பாத்திரத்தில் சுமார் 44 மூலிகைகள் மற்றும் இதர பொருட்கள் கொண்டு சந்தனாதி தைலம் சுமார் 8 மாத காலங்களில் தயார் செய்ய உத்தேசித்து நேற்று காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் பூஜைகள் செய்யப்பட்டு சந்தனாதி தைலம் தயார் செய்யும் பணி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையாளர் கவிதா, செயல் அலுவலர் அய்யர் சிவமணி, கண்காணிப்பாளர் சுப்புலட்சுமி, பேஸ்கார் முருகேசன் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story