தேசியக்கொடிகள் வழங்கும் நிகழ்ச்சி
தேசியக்கொடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட குழுமத்தின் சார்பில் நாட்டு நலப்பணி திட்டம் செயல்படுத்தப்படும் கல்லூரிகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடிகள் வழங்கும் நிகழ்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கொடிகள் நாட்டு நலப்படுத்திட்ட அலகுகளால் தத்தெடுக்கப்பட்ட கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பதிவாளர் (பொறுப்பு) கணேசன் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபிரபா வரவேற்றார். முடிவில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் யோகநானந்த் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு கல்லூரிகளில் இருந்து 100 நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள், 200 மாணவர்கள் கலந்து கொண்டனர்.