ஆஸ்கார் விருது பெற்ற பொம்மன், பெள்ளியை சந்தித்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஆஸ்கார் விருது பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை திரவுபதி முர்மு சந்தித்து பாராட்டினார்
நீலகிரி,
ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூரு விமான தளத்துக்கு வந்தார் . பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு மசினகுடிக்கு வந்தடைந்தார் .
இதனை தொடர்ந்து ஆஸ்கார் விருது பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை திரவுபதி முர்மு சந்தித்து பாராட்டினார் .தொடர்ந்து தெப்பக்காடு பகுதியில் உள்ள பழங்குடியின மாதிரி கிராமத்தையும் திரவுபதி முர்மு பார்வையிட்டார்.
ஜனாதிபதி வருகையையொட்டி மசினகுடியில் ஹெலிபேடு மற்றும் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story