ஊராட்சி தலைவருக்கு அரிவாள் வெட்டு


ஊராட்சி தலைவருக்கு அரிவாள் வெட்டு
x

வலங்கைமான் அருகே ஊராட்சி தலைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருவாரூர்

வலங்கைமான்;

வலங்கைமான் அடுத்த வேப்பதாங்குடி, முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர், நாகப்பன் மகன் பன்னீர்செல்வம் (வயது55). அரவூர் ஊராட்சி தலைவரான இவர் நேற்று இரவு 10 மணி அளவில் நீடாமங்கலம் மெயின் ரோட்டில் மேட்டு தெரு என்ற இடத்தில் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தாா். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த, மர்ம நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால், பன்னீர்செல்வத்தை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் பன்னீர்செல்வம் கீழே விழுந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த வலங்கைமான் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பன்னீர்செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து வலங்கைமான் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.


Next Story