உதவி செய்வது போல் நடித்து விபத்தில் சிக்கியவரிடம் பணம் பறித்த மர்மநபர்கள்
தேவதானப்பட்டி அருகே உதவி செய்வதுபோல் நடித்து விபத்தில் சிக்கியவரிடம் பணம் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி
தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 38). ஓட்டல் உரிமையாளர். நேற்று இரவு இவர், திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் இருந்து மோட்டார்சைக்கிளில் தேனி மாவட்டம் கெங்குவார்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். பெரியகுளம்-வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் ஜி.மீனாட்சிபுரம் பிரிவு அருகே வந்தபோது சாலையில் இருந்த கல்லில் மோட்டார்சைக்கிள் மோதியதில் தவறி கீழே விழுந்தார்.
இதையடுத்து அந்த பகுதியில் நின்ற 3 பேர் உதவி செய்வதுபோல் வந்தனர். அப்போது கார்த்திக்கை தூக்குவதுபோல் நடித்து மோட்டார்சைக்கிளில் இருந்த செல்போன், ஏடி.எம். கார்டு, ரூ.2 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி ஓடினர். இதுகுறித்து அவர் தேவதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story