பாண்டியநல்லூர் ஊராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை
பாண்டியநல்லூர் ஊராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சோளிங்கர்
பாண்டியநல்லூர் ஊராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சோளிங்கர் வட்டார மருத்துவமனை சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்ைககள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி பாண்டியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாணாவரம் கூட்டு சாலை பகுதியில் உள்ள பழைய டயர் கிடங்கு மற்றும் பழைய பொருட்கள் கிடங்கு பகுதியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அரிதாஸ் ஆய்வு செய்தார்.
அவருடன் வட்டார சுகாதார ஆய்வாளர்கள் சவுந்தரபாண்டியன், சிவக்குமார், குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணி, ரகுராம்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன், ஊராட்சி செயலாளர் லட்சுமணன் ஆகியோரும் ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது பழைய டயர் மற்றும் பழைய பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கி இருந்த மழை நீரை அகற்றி டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து இனிவரும் காலங்களில் டெங்கு ஏற்படும் விதமாக சுகாதார சீர்கேடாக இருந்தால் உரிய நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என சம்பந்தப்பட்ட கிடங்கு உரிமையாளர்களுக்கு எச்சரித்தனர்.
அதே பகுதியில் அனுமதி இன்றி இயங்கி வரும் விளககெண்எணய் தயாரிப்பு நிறுவனத்திற்கு உரிய உரிமம் பெற வேண்டும், சிறு நிறுவனத்திற்கான சுகாதார துறையிளனரிடமிருந்து சான்றிதழ் பெற வேண்டும் என உரிமையாளரை அறிவுறுத்தினர்.