காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை
சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தெற்கு, வடக்கு பேய்க்குளத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இப்பணியில் சுகாதார ஆய்வாளர்கள் ஜேசுராஜ், மகேஷ்குமார் மற்றும் டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் ஈடுபட்டு காய்ச்சலை உருவாக்கும் கொசு புழுக்களை அழித்தனர். தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு நிலவேம்பு குடிநீர் வினியோகிக்கப்பட்டது. டெங்கு நோய் விழிப்புணர்வு துண்டு பிரசரம் வழங்கப்பட்டது.
இதேபோல் பேய்க்குளம் பஜாரில் பழைய இரும்புக்கடை, கடைகளில் மழை நீர் தேங்குவதை கண்டறிந்து அகற்றப்பட்டது. மேலும் டெங்கு பரவல் குறித்த துண்டு பிரசுரமும் வினியோகிக்கப்பட்டது.
Related Tags :
Next Story