கொத்தமல்லி விலை கடும் வீழ்ச்சி
சூளகிரி பகுதியில் கொத்தமல்லி விலை கடும் வீழ்ச்சி அடைந்து 1 கட்டு ரூ.5-க்கு விற்பனையானது.
கிருஷ்ணகிரி
சூளகிரி:
சூளகிரி, புலியரசி, மருதாண்டபள்ளி மற்றும் சுற்று வட்டாரங்களில் பல ஏக்கரில் விவசாயிகள் கொத்தமல்லி பயிரிட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு கட்டு கொத்தமல்லி ரூ.25-க்கு விற்கப்பட்டது. நேற்று வரத்து அதிகரிப்பால் மார்க்கெட்டில் ஒரு கட்டு கொத்தமல்லி ரூ.5-க்கு விற்கப்பட்டது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். சூளகிரி பகுதியில் விளைவிக்கப்படும் கொத்தமல்லி முழுவதும், அரசே கொள்முதல் செய்து உரிய விலையை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story