தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு


தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
x

அகில இந்திய அளவில் நடைபெற்ற தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;

மயிலாடுதுறை அருகே மல்லியம் அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த 5 மாணவர்கள் அகில இந்திய அளவில் நடைபெற்ற தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். அந்த மாணவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற ஒன்றியம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு ஆசிரியர் மன்ற ஒன்றிய தலைவர் வே. கந்தன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ரா. சுரேஷ் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் திருமாவளவன் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில வெளியீட்டுச் செயலாளர் ஜெக.மணிவாசகம் தேசிய அளவில் நடைபெற்ற திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தில்ரோஸ்பானு, நிஷா, ரித்திஷா, வசந்த், ஜெனார்த்தனன் ஆகியோருக்கு பரிசு பொருட்கள் வழங்கி சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


Next Story