காய்கறி கடைகளில் விலைப்பட்டியல் வைக்க வேண்டும்


காய்கறி கடைகளில் விலைப்பட்டியல் வைக்க வேண்டும்
x
தினத்தந்தி 12 Dec 2022 12:15 AM IST (Updated: 12 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் காய்கறி கடைகளில் விலைப்பட்டியல் வைக்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி புளூமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் செயற்குழு கூட்டம் கோத்தகிரியில் நடைபெற்றது. இதற்கு தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். பொருளாளர் மரியம்மா, துணை தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கோத்தகிரியில் உள்ள காய்கறி கடைகள் மற்றும் பழக்கடைகளில், உழவர் சந்தையில் வைப்பது போன்ற விலைப்பட்டியல் வைக்க வலியுறுத்துவது, டானிங்டன் பகுதியில் கோடநாடு, சோலூர்மட்டம் கிராமங்களுக்கு செல்ல காத்திருக்கும் பயணிகள் பயன்பெறும் வகையில் பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும். வரும் 24-ந் தேதி தேசிய நுகர்வோர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவது, கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் கொட்டகொம்பை பகுதியில் ஏற்கனவே இருந்த 2 வேகத்தடையை மீண்டும் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் பிரவின், கிரேஸி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணை செயலாளர் வினோபா பாப் நன்றி கூறினார்.


Next Story