மின்சாரம் தாக்கி அர்ச்சகர் சாவு


மின்சாரம் தாக்கி அர்ச்சகர் சாவு
x
தினத்தந்தி 15 Aug 2023 12:15 AM IST (Updated: 15 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் காசிவிஸ்வநாதர் கோவிலில் மந்திரம் சொல்ல மைக்கை எடுத்தபோது மின்சாரம் தாக்கி அர்ச்சகர் பரிதாபமாக இறந்தார்.

திருவாரூர்

திருவாரூர்:

திருவாரூர் காசிவிஸ்வநாதர் கோவிலில் மந்திரம் சொல்ல மைக்கை எடுத்தபோது மின்சாரம் தாக்கி அர்ச்சகர் பரிதாபமாக இறந்தார்.

உதவி அர்ச்சகர்

திருவாரூர் அருகே உள்ள புலிவலம் பகுதியை சேர்ந்தவர் ஞானசுந்தரம் (வயது 42). இவருடைய மனைவி அபிநயா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். ஞானசுந்தரம் உதவி அர்ச்சகராக இருந்து வந்தார்.

திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று முன்தினம் பிரதோஷத்தை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.

மின்சாரம் தாக்கி சாவு

கோவிலில் சாமிக்கு அபிஷேகம் நடத்திய அர்ச்சகருக்கு உதவியாக ஞானசுந்தரம் இருந்துள்ளார். அவர் மந்திரம் ெசால்வதற்காக அங்கிருந்த மைக்கை எடுத்துள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட ஞானசுந்தரத்துக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அங்கிருந்த பக்தர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஞானசுந்தரம் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறைபணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உதவி அர்ச்சகர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story