பூசாரிகள் பேரமைப்பு கூட்டம்
திண்டுக்கல்லில் பூசாரிகள் பேரமைப்பு கூட்டம் நடந்தது.
திண்டுக்கல் மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோவிலில் பூசாரிகள் பேரமைப்பு மாவட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு மாநில இணைச்செயலாளர் உதயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் சரவணக்குமார், செயலாளர் சந்தோஷ், பொருளாளர் முத்துச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிரணி தலைவர் ஜோதி வரவேற்றார்.
கூட்டத்தில், கோவை கவுமார மடத்தில் நடைபெறும் பூசாரிகளுக்கான பயிற்சி வகுப்பில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். 60 வயதை கடந்த பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் உள்ள சிக்கல்கள், காலதாமதம் ஆகிவற்றை சரிசெய்து, தகுதியானவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழக அரசு சார்பில் நலவாரிய அடையாள அட்டை மற்றும் கோவில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஏராளமான பூசாரிகள் கலந்துகொண்டனர். இதில் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. முடிவில் மாநகர தலைவர் ஆரியன் நன்றி கூறினார்.