தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்
திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் மாவட்டச் செயலாளர் ஈவேரா பேசினார். கூட்டத்தில் மாநில துணைச் செயலாளர் ஜூலியஸ், மாவட்டப் பொருளாளர் சுபாஷ், மாநில செயற்குழு உறுப்பினர் அய்யப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு அனுமதி உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை(செவ்வாய்க்கிழமை) சென்னையில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து 300 ஆசிரியர்கள் பங்கேற்பது. பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு நடைபெறாமல் மற்ற பணி மாறுதல், பதிவி உயர்வு கலந்தாய்வு நடத்துவது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும். எனவே நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை ஆசிரியர் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக வட்டாரச் செயலாளர் வேதமூர்த்தி வரவேற்றார். முடிவில் மாவட்ட துணைச்செயலாளர் சத்யநாராயணன் நன்றி கூறினார்.