ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
தென்காசியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ஜனவரி மாதம் ஊதியத்தை உடனடியாக வழங்க கோரி தென்காசியில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாரிமுத்து வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜன் ஜான், செல்வராஜ், ஜாகிரா, துணை செயலாளர்கள் ஜேம்ஸ் ஆரோக்கியராஜ், கிருஷ்ணன், கீதா கோமதி, பொதுக்குழு உறுப்பினர்கள் துரைராஜ், மாடசாமி, கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள் மாணிக்கம், சுதர்சன், ராஜ்குமார், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் திருமலை முருகன் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் செந்தூர்பாண்டியன், சதீஷ்குமார், பிச்சைக்கனி, ஆகியோர் பேசினார்கள்.
மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் சிறப்புரையாற்றினார். முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் லட்சுமி நன்றி கூறினார்.