தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி கூட்டம்


தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி கூட்டம்
x

திருவாரூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி கூட்டம்

திருவாரூர்

கொரடாச்சேரி:

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திருவாரூரில் இருந்து காணொலி வாயிலாக நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மு.லெட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் இரா.குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன் விளக்கி கூறினார். இதில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை நீக்கி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம்(மே) 2-ந்தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


Next Story